2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான பதிவுகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். இந்த வருடத்திற்கான கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சை தொடர்பில் சில வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் காணப்படுகின்றமையும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டுக்காக 41,500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.