எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த குறிப்பிட்டார். எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை இது குறித்த தீர்மானங்களை அமுல்படுத்த முடியாதுள்ளதாக அவர் கூறினார்.

தேசிய முன்பள்ளி கொள்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அது தொடர்பான சட்டமூலத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸிடம் கையளிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் முன்பள்ளி கல்வியை வினைத்திறனுடன் மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.