தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு நேற்றைய தினம் 50 ற்கும் மேட்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.இவர்களுடனான சந்திப்பொன்று நேற்று (10) அமைச்சின் கேட்போர் கூடத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது..

இதன்போது பட்டதாரி பயிலுனர்களுக்கு மத்தியில் உரையாடிய அமைச்சர் பட்டதாரி பயிலுனர்களாகிய நீங்கள் இன்றையதினம் கடமையில் இணைத்துக்கொண்டமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

நீங்கள் அனைவரும் எமது சமூகத்திற்கு மிகப்பெருமதியானவர்கள். மேலும் உங்களின் கடமை பெருந்தோட்ட சமூக மக்களுக்கும், இந்நாட்டிற்கும் பெருமதியானது. நீங்கள் அனைவரும் இளைஞர்கள் எனவே நீங்கள் அனைவரும் தங்களது கடைமைகளை நேர்த்தியாக செய்வீர்கள் என நம்புகின்றேன்.

மேலும் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியிலே எவ்வாறு கொண்டு செல்வது, மக்கள் மத்தியிலே நீங்கள் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, உங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் பச்சத்தில் அதனை என்னால் நிவர்த்திசெய்து தரமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்)