யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் அறுவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர், த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் போதுமான கூறுகள் இல்லாமையால் அவர்களிடம் மீளவும் மாதிரிகள் பெறப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது.