சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் போது, நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால்,

அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான தனியார் பிரிவுகளின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளுடன் தனியார் பிரிவுகள் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கான பிசிஆர் பரிசோதனையை அரசாங்கமே முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.