கொழும்பு மாவட்டத்தில் 309 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக  நேற்று(15) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி தொற்றாளர்களிடையே அனேகமானோர் மட்டக்குளி மற்றும் கிரான்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, மட்டக்குளி  பிரதேசத்தில் 62 பேரும் கிரான்பாஸ் பிரதேசத்தில் 69 பேரும் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.