இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களால், நேற்று (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக, முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து கவனயீர்ப்பு பேரணியாகச் சென்ற மீனவர்கள், கடற்கரை வீதி வழியாக மாவட்டச் செயலகம் வரை சென்றனர்.

 இதன்போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக தகரப் பந்தல் அமைத்து, கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட போது, அங்குவந்த முல்லைத்தீவுப் பொலிஸார், பந்தல் அமைக்கக்கூடாது எனத் தடை விதித்தனர். 

இதையடுத்து, பந்தல் அமைப்பதற்கு கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டு, மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள் பந்தல் அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர், சம்மேளன தலைவர் ஆகியோரால் மாவட்டச் செயலாளர் க.விமலநாதனிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டது.