நெல்லியடி விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த திரு. நல்லதம்பி ரட்ணநாதன் (தோழர் ரத்தி) அவர்கள் 17-12-2020 காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

ஆரம்ப காலங்களில் கழகத்தின் நெல்லியடி பிரதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்த இவர் மரணிக்கும் வரையில் கட்சியின் செயல்பாடுகளுக்கு தன்னாலான பங்களிப்பை ஆற்றி வந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொண்டு எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)