சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதராக நியமிக்கப்பட்ட  பாலித கோஹன தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த 15ஆம் திகதி சீனாவை சென்றடைந்த அவர் நேற்று(16) கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவரை, பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.