தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இன்று(17) முதற்தடவையாக கூடவுள்ளனர். அடுத்த வருடத்துக்கான வாக்காளர் இடாப்பு தயாரித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்களில் முன்கூட்டியே வாக்களித்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களும்ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்மூலங்களை  நடாளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பது குறித்தும் தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.