மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் சகலருக்கும் 3 இடங்களில் அன்டிஜென் பரி​​சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ​லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.இந்த பரி​சோதனைகள் மறு அறிவித்தல் வரையிலும் முன்னெடுக்கப்படும்.

“மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் போது, மூன்று ​ வெளியேறும் இடங்களில் வைத்தே இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு- கண்டி வீதியில், நிட்டம்புவ எனுமிடத்தில் மேற்கொள்ளப்படும்.

கொழும்பு- அவிசாவளை வீதியில், கொஸ்கம, சாலாவ பிரதேசங்களில் வைத்து முன்னெடுக்கப்படும்.

கொழும்பு- சிலாபம் வீதியில் கட்டுநாயக்கவில் வைத்து அன்டிஜென் பரி​​சோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கொ​ரோனா வைரஸ் ​தொற்று, ஏனைய மாவட்டங்களில் வியாபிக்காமல் இருக்கும் வகையிலேயே இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸார், சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் தலைமையிலான குழுக்களே இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளன.