இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மத்திய வங்கியில் உதவி ஆளுநர்களாக செயற்பட்ட யிவட் பெர்னாண்டோ மற்றும் தம்மிக்க நாணயக்கார ஆகியோர் புதிய பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யிவட் பெர்னாண்டோ 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றியவராவார்.

இதேவேளை, பிரதி ஆளுநராக புதியதாக நியமனம் பெற்றுள்ள தம்மிக்க நாணயக்கார இலங்கை மத்திய வங்கியில் 27 வருட சேவை அனுபவமுள்ள ஒருவராவார்.