நீர்கொழும்பு பொதுசுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 302ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தலாதூவ வீடமைப்புத் தொகுதியில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் 13 பேருக்குக்  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.