மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

விசேட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு துப்பாக்கிகள் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டதாகவும், மஹர சிறைக் கலவரம் தொடர்பில் இதுவரையில் 500 மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.