கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியொன்றைக் கொள்வனவு செய்யும்பொருட்டு, உலக வங்கிளில் 10 பில்லியன் ரூபாய் கடன் பெறுவது தொடர்பாக, அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக, அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்காக, ஆசியா அபிவிருத்தி வங்கி ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அத்துடன், இலகு கடன் ஒன்றைப் பெறுவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமான உலக சுகாதார ஸ்தாபனம் ஈடுபட்டுள்ள சர்வதேச முயற்சியின் கீழ், இலங்கை தனது மக்கள் தொகையில் 20 சதவீதத்தினருக்கு தடுப்பூசி வழங்குவதாக, இதுவரை உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.