மத்திய மாகாணத்தில் நான்குப் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி – தொலுவ, உடதும்பர, மாத்தளை – நாவுல, நுவரெலியா – வலப்பனை ஆகிய பிரதேச செயலகங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.