இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் முதலில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா குழு ஒன்றிற்கு நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மசேன இதனை தெரிவித்தார்.

ரஷ்யா மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி 200 சுற்றுலா பயணிகள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களுக்கு வர உள்ளனர்.

இந் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பிரதிநிதிகளை அறிவுறுத்தும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.