கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்ட 594 பேரில்  அனேகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 253 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கம்பஹா மாவட்டத்தில் 124 பேரும்,  கண்டியில் 62 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 156 பேர் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர் என கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டில் 16 மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37, 261 ஆக அதிகரித்துள்ளது.