வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான செயன்முறையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திருத்தங்களானது எதிர்வரும் 26ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படுமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய,கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையமானது, வெளிநாடுகளிலுள்ள சபைகளுடன் ஒருங்கிணைந்து, புலம்பெயர் தொழிலாளர்கள்,மாணவர்கள், நோயாளர்கள், குறுகிய கால வீசா அனுமதியுடையவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினருக்கு அரசாங்க தனிமைப்படுத்தல் வசதியுடன் நாட்டுக்கு வருவதற்கான விமான பயணங்களை ஏற்பாடு செய்யவுள்ளது.

அத்துடன்  இலங்கை வம்சாவளி வெளிநாட்டவர்கள், இரட்டைப் பிரஜாவுரிடையுடைவர்கள் ஹோட்டல் ஒன்றில் பணம் செலுத்தி தனிமைப்படுத்தலின் கீழ், வர்த்தக அல்லது வேறு விமானங்களில் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.