கடந்த வருடம் ஏப்ரல்  21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிவரை  ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டு ஜனாதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

டிசெம்பர் 20ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவடையவிருந்தது.

மேலும் வாக்குமூலங்களை பதிவுசெய்யவிருப்பதால் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.