கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(22) அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானோர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்காக தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதுவரை கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வந்த நிலையி;ல் நேற்று கொழும்பை பின்தள்ளி களுத்துறை முன்னணியில் உள்ளது.

இதற்கமைய நேற்று பதிவான 428 தொற்றாளர்களில் 193 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களில் 162 பேர் அட்டுளுகமையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனையோரில் கொழும்பு மாவட்டத்தில் 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தின் பொரலை பகுதியிலேயே அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், திருகோணமலையில் 42 பேரும், இரத்தினபுரியில் 23 பேரும், நுவரெலியாவில் 15 பேரும், காலி மற்றும் மாத்தறையில் 11 பேரும், குருநாகல் பகுதியில் 07 பேரும், அம்பாறையில் 05 பேரும், ஹம்பாந்தோட்டையில் 04, முல்லைத்தீவில் 03 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.