புதிதாகப் பிறக்கும் சிசுக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டு மற்றும் பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி சந்தேகநபரை மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

30 சிசுக்களை இதுவரை விற்பனை செய்துள்ள சந்தேகநபர், நேற்று தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு, இன்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.