நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இம்முறை சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக,  ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதை தவிர்க்குமாறு, நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஹட்டன் தோட்டப்புற பகுதிகளில் கொவிட் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக, நுவரெலியா மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.