திருகோணமலை மாவட்டத்;துக்கு பயணம் மேற்கொள்வதை இயன்றளவு தவிர்க்குமாறு, மாவட்ட கொரோனா ஒழிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இங்கு கடந்த மூன்று தினங்களுக்குள் 70 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மாவட்ட செயலாளர் சமன் தர்சன தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவும் அபாயம் காணப்படுவதால் பண்டிகை காலத்தில் பயணங்களை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.