கிளிநொச்சி பெரிய குளம் பகுதியில் ஓட்டோ புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி புளியம்பொக்கனை சந்தியில் இருந்துபெரியகுளம் நோக்கி பயணிக்கும் போதே இவ்வனர்த்தம் நேறறு (24)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ஆறுமுகம் தட்சயன் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்தனர்.