கொழும்பு மோதரை பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திலுள்ள 45 முதியோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.