கிழக்கு மாகாணத்தில் 12 மணித்தியாலங்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதனால், சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டும் COVID-19 தொற்று ஒழிப்பு செயற்பாடுகளுக்கு உரிய வகையில் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில பகுதிகளில் COVID-19 பரிசோதனைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காமையால், தொற்றின் தாக்கத்தை முழுமையாக அறிய முடியாத நிலைமை காணப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.

மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே தொற்றின் தாக்கம் எங்கெங்கு வியாபித்துள்ளது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.