உக்காத ஆறு வகையான பிளாஸ்டிக்கை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிளாஸ்டிக் வகைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அனுமதி பெற்றுக் கொள்வதற்காக அதனை சட்டமா அதிபரிடம் முன்வைத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்குள் இந்த நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.