உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, வெளிக்குளம் பகுதியை சேர்ந்த  22 வயதுடைய ராஜா வினிதா என்ற தனது மனைவி இம்மாதம் 13ஆம் திகதியிலிருந்துக் காணவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பில தெரிவித்துள்ள அவரதுக் கணவர், ”13ஆம் திகதி மாலை அம்மாவின் வீட்டுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பியிருக்கவில்லை என்பதால், அவர் செல்வதாகக் கூறிய இடத்துக்குச் சென்று பார்த்தோம். அங்கு அவர் வரவில்லை எனக் கூறினார்கள். அன்றையத் தினத்திலிருந்து அவரதுத் தொலைப்பேசி இலக்கமும் இயங்கவில்லை.” எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அப்பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 0769080042 என்கிற அவரின் கணவரது தொலைபேசி இலக்கத்துக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.