உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொவிட் 19 தொற்றால் உலகில் 7,111 பேர் மரணித்துள்ளனர் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயெ தொடர்ந்து அதிக மரணங்கள் பதிவாகி வருவதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு அதிக  பணத்தை செலவு செய்தாலும், பொதுமக்கள் முறையாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.