நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 500 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில், 448 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் 52 பேர் சிறைச்சாலை கொத்தணியிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 40, 282 ஆக அதிகரித்துள்ளது.