திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தத் துறைமுகத்துடன் இணைந்ததாக கைத்தொழில் பேட்டையை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

துறைமுக வளாகத்திற்கு அவர் நேற்று விஜயம் செய்த போது இதனைத் தெரிவித்தார். இங்கு ஒன்றரை கிலோ மீற்றர் நீளமான புகையிரதப் பாதை அமைத்தல் தொடர்பான விடயங்களை ஆராயும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)