இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பஸ் சேவையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வேலைத்திட்டங்வகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால், இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பஸ் சேவையை சுகாதார பரிந்துரைகளின் கீழ் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.