தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும்

மேலும் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்
01. இன்று அதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள் பொலிஸ் பிரிவு
• டேம் வீதி பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
• மருதானை பொலிஸ் பிரிவு

கிராம உத்தியோகத்தர் பிரிவு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹூணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெள்ளவத்த பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்
• பொரள்ளை பொலிஸ் பிரிவில் ஹல்கஹாவத்த மற்றும் காளிபுள்ளே வத்தை
• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு

02. இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசம்

• வாழைத் தோட்டப் பொலிஸ் பிரிவில் அலுத்கட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அலுத்கட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேலும் அறிவித்துள்ளார்.