கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, இன்று பிறப்கல் 1.30 மணிக்கு உக்ரைனிலிருந்து மத்தள விமான நிலையத்திற்கு 185 பயணிகள் வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனங்களின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.

´குறித்த சுற்றுலாப்பயணிகள் இந்நாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அனைத்து தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு விமான நிலைய ஊழியர்கள் தயாராக உள்ளனர். “