கிழக்கு மாகாணத்தில் இன்று (29) காலை 6 மணியுடன் முடிவடைந்த 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தொவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “கடந்த 12 மணி நேரத்தில் கல்முனை தெற்கில் 24 பேரும் கல்முனை வடக்கில் 3 பேரும் காத்தான்குடியில் 4 பேரும் மட்டக்களப்பு, வெல்லாவெளி, ஆரையம்பதி, தமண, கோமரன்கடவல, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பகுதியளில் தலா ஒருவருமாக 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை தொற்றாளர்கள் தொற்றாளர்கள் 1,058 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கொரோனா தொற்றுக்காரணமாக கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 4 மரணங்களும் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் ஒன்று உட்பட 5 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.