கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை நடவடிக்கை தொடர்பில் தற்போது திட்டமிட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலகளவில் தற்போது வௌியிடப்பட்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் நன்கு ஆராய்ந்த பிறகு இலங்கைக்கு ஏற்ற தடுப்பூசியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அடுத்த வருடம் முதல் இரு மாதங்களுக்குள் தடுப்பூசியை நாட்டிற்குள் கொண்டு வர எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.