கொவிட் 19 தொற்றுக்குள்ளான 549 பேர்  நேற்று(28) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 41,603 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றினால் நேற்று அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கொவிட் 19 தொற்றுக்குள்ளான 8,188 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.