உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனவரி மாதம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.