சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நைஜீரிய நாட்டவர்கள் இவ்வாறான மோசடி  வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இன்றைய தினம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர், பண மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.