அருவியாற்றின் சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போயிருந்த கிராம அலுவலகர், இன்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றுகாலை, அரிப்பு – பழைய தோனித்துறை பகுதியில், இவரது சடலமாக கரை ஒதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

உயிரிழந்த கிராம அலுவலகர் உள்ளிட்ட 6 பேர், கடந்த செவ்வாய்க்கிழமை (29), அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து, வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இவர்கள் ஆற்றில் குறித்துக்கொண்டிருந்த நிலையில், சுழிக்குள் அகப்பட்டுள்ளனர். அதையடுத்து, அங்கிருந்தவர்களால், 5 பெர் காப்பாற்றப்பட்ட நிலையில், குறித்த கிராம அலுவலகர் மாத்திரம் காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து, தொடர்ந்து, 3 நாள்கள் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,இன்றுக் காலை அரிப்பு – பழைய தோனித்துறை பகுதியில், இவரது சடலமாக கரை ஒதுங்கியிருந்தது.

சம்பவத்தினத்தன்று, இவர்களை அனைவரும் போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் இருந்து மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.