மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற நபர்களுக்கு, எழுமாறாக நேற்று(30) முன்னெடுக்கப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனையின்போது, 16 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வெளியேறும் 11 இடங்களில் கடந்த 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையில், இதுவரை 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.