தூர இடங்களுக்கான பஸ் சேவை இன்றிலிருந்து ஆரம்பமாகுமென தெரிவித்திருந்தாலும்,குறித்த சேவைகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படவில்லை என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது பயண சேவையை மட்டுப்படுத்தியுள்ளமை காரணமாக, சில வீதிகளில் குறைந்தளவு பஸ்களே சேவையில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குறையை இ.போ.ச பஸ்கள் மூலம் நிவர்த்தி செய்வதே அரசாங்கத்தின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.