புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதுடன் தொடர்புடைய அளவுகோல்களை தயாரிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று நேற்று (01) இடம்பெற்ற நிலையில் இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தலை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளை இம்மாதம் ஆரம்பிக்க குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு நியமிக்கப்படும் குழுவின் பரிந்துரைகள் தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பின்னர் குறித்த அளவுகோல்களை குறித்த தரப்பினருக்கு அறிந்து கொள்வதற்காக வர்த்தமானி அறிவித்தல் ஊடக வௌியிடப்படவுள்ளது.