Header image alt text

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால், நாளை (04) பிற்பகல் 1 மணி முதல் பொலன்னறுவையில் 04 இடங்களிலும் நாளை மறுதினம் (05) நண்பகல் 12 மணி முதல் சிகிரியா சுற்றுலா வலயத்திலும் உள்நாட்டு பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் சிலர் கொக்கிளாயில் இருந்து முள்ளியவளை வரையான பாதயாத்திரை ஒன்றை, இன்று ஆரம்பித்துள்ளனர்

வருடம் தோறும் குறித்த காலப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து இந்தியாவிலுள்ள சபரிமலைக்கு சென்று, அங்கு வழிபட்டு வருவது வழமை. Read more

சுமார் 68,000 இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்காக காத்திருப்பதாக,இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மோசமான உலகளாவிய நிலையின் கீழ், தற்போது நிலவும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றான இலங்கையர்களை Read more

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ், மூன்றாவது சுற்றுலா குழு நாட்டை வந்தடைந்துள்ளது.

உக்ரைன் நாட்டிலிருந்தே மூன்றாவது சுற்றுலா குழுவும் நாட்டை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த  173 சுற்றுலாப் பயணிகள் மத்தல விமான நிலையத்தை நேற்று வந்தடைந்துள்ளனர்.

நாளை  (4) காலை 5 மணியிலிருந்து கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய முகத்துவாரம் பொலிஸ் பிரிவு முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளதுடன், வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு Read more

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கிடையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டுவரும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம்,  இதுவரை 102 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற மேலும் ஐவர் , நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

புலி தாக்கி ஒருவர் பலி-

Posted by plotenewseditor on 3 January 2021
Posted in செய்திகள் 

அம்பாறை பாணமை பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை பகுதியில் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் மீது சிறுத்தைப்புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்

ஒருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் (01) இடம்பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து வனஜீவராசி திணைக்கள காரியாலயத்தை சேதமடைவித்து 5 பேரை கைது செய்துள்ளதாக பாணமை பொலிசார் தெரிவித்தனர். Read more

யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3,736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

இலங்கையில் மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேய்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை இந்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. Read more