மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கிடையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டுவரும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம்,  இதுவரை 102 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற மேலும் ஐவர் , நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம்  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய,  இதுவரை 13,029 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.