அம்பாறை பாணமை பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை பகுதியில் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் மீது சிறுத்தைப்புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்

ஒருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் (01) இடம்பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து வனஜீவராசி திணைக்கள காரியாலயத்தை சேதமடைவித்து 5 பேரை கைது செய்துள்ளதாக பாணமை பொலிசார் தெரிவித்தனர்.

பாணமையைச் சேர்ந்த 56 வயதுடைடய விவசாயியான ஞானசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பிமலை தொல்பொருள் பூமிக்கு அருகில் இருந்து 14 கிலோமீற்றர் தூரத்திலுள்ள விவசாய நிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 31 ஆம் திகதி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது தாக்கியதில் அவர்படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (01) விவசாய நடவடிக்கைக்காக அந்த பகுதிக்கு 4 பேர் என்ற நிலையில் ஒருவர் மீது புலி பாய்ந்து தாக்கியதையடுத்து அவருடன் சென்றவர்கள் புலி மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பலி தப்பிஓடியதுடன் காயமடைந்தவரை பொத்துவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்திலுள்ள வனஜீவராசி திணைக்களத்தின் காரியாலயத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தாக்கி சேதம் விளைவித்ததையடுத்து 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனா.;

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் விசேட விலங்கு மருத்துவ குழுவினர் நாளை அங்கு செல்லவுள்ளதாகவும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் மூலம் அந்த சிறுத்தையை கண்டறிய முடியும் என வனஜீவராசி திணைக்களப் பணிப்பாளர் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.

இதேவேளை பாணமை காட்டுப்பகுதியயை அண்டிய பகுதியில் கடந்த மாதம் குறித்த புலி ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதேவேளை அந்த பகுதியில் உள்ள நாய்களை தொடர்ந்து புலி வேட்டையாடி வருகின்றது இதனால் மக்கள் பயந்து பீதியடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.