Header image alt text

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இந்திய வௌியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கை வரவுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவில், முடக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், வவுனியா நகரிலுள்ள தங்களது வர்த்தக நிலையங்களைத் திறந்து வைத்துள்ளமையால், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா பட்டானிக்சூர் பகுதியில், கொரானா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அப்பகுதி முற்றாக முடக்கப்பட்டது. Read more

சுகாதார அமைச்சில் குடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2015/2016 அல்லது 2017 ஆம் ஆண்டுகளில்  க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற திருமணமாகாத மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். Read more

க.பொ.த உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை (05) ஆரம்பமாகவுள்ளது. அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

12 பாடங்கள் தொடர்பான செய்முறைப் பரீட்சைகள் நாளை இடம்பெற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 403 பேர் நேற்று(03) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றாளர்கள் நாட்டின் 20 மாவட்டங்களில் நேற்று பதிவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

வட மத்திய மாகாணம் மற்றும் ஏனைய இடங்களில்பயிரிட்ட சோளத் தோட்டங்களில் படைப் புழுக்களின் (சேனா அந்துப்பூச்சி கம்பளிப்பூச்சி) வேகமான தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞான நிபுணத்துவத்தை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில்

ஜனாதிபதியவர்களின் முயற்சியில் ருவாண்டாவிலிருந்து இலங்கைக்கு வந்த சிறப்பு தூதுக்குழுவினர் Read more

வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரதம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. Read more

உக்ரைன் நாட்டில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சீகிரயா மற்றும் பொலன்னறுவைக்கு இன்று மற்றும் நாளை செல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டவர்களுக்காக குறித்த பகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு சுற்றுலா பயணிகளின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

 

சௌபாக்கிய தொலைநோக்கு´ கொள்ளை பிரகடனத்திற்கு அமைய நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் இன்று (04) ஆரம்பமாகிறது.

குறித்த வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக 3 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் Read more