கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக எம்.கிறிஸ்டிலால் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் நேற்று (05) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தை உடைய இவர், இதற்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றியவராவார்.

முன்னதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஐ.கே.ஜி.முத்துபண்டா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையை அடுத்து, இவர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.