முகக் கவசம் (மாஸ்க்) அணியாவிட்டாலோ, சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டாலோ,

அவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்துள்ள பொலிஸார், அவ்வாறானவர்களுக்குக் கட்டாயமாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அவ்வாறு, முகக்கவசம் அணியாத 74 பேர், கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், முகக்கவசம் அணியாத 2,172 பேர், ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நேற்று (04) வரையிலுமான காலப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ள அவர், இச்செயற்பாடுகள் நேற்று (5) முதல் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.